ரிபப்ளிக் டிவி தலைமை செய்தி ஆசிரியருக்கு 2 வார நீதிமன்ற காவல்

தாயையும் மகனையும் தற்கொலைக்கு தூண்டியதாக மும்பையில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைமை செய்தி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமிக்கு 2 வார நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.


 


விளம்பர நிறுவனம் நடத்தி வந்த அன்வாய் நாயக் என்பவருக்கு, கோஸ்வாமியின் நிறுவனம், 5 கோடியே 40 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணம் கிடைக்காத விரக்தியில் அன்வாய் நாயக்கும் அவரது தாயாரும் கடந்த 2018ல் தற்கொலை செய்து கொண்டனர்.


 


இந்த வழக்கில் அர்ணாப் கோஸ்வாமியை கைது செய்ததோடு, அப்போது பெண் காவல் அதிகாரியை தாக்கியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த நீதிபதி, போலிசார் தாக்கியதாக கூறிய அர்ணாபின் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா