வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு.. டிசம்பர் 2-ஆம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்ததால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் தென்தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் விநாடிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 75 கிமீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.