தலையணைக்கு கீழ் மொபைல் போனை சார்ஜ் போட்டபடி தூங்கியவருக்கு நேர்ந்த விபரீதம்..
கேரளாவில் தலையணைக்கு கீழ் மொபைல் போனை சார்ஜ் போட்டபடி தூங்கியவர் தீப்பிடித்ததில் காயமடைந்தார்.
கொல்லம் மாவட்டம் ஒச்சிரா என்ற இடத்தைச் சேர்ந்த சந்திரபாபு என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று வீட்டில் இருந்த இவர் தலையணைக்கு கீழே தனது மொபைல் போனை சார்ஜ் செய்ய வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.
அப்போது மொபைல் போன் வெடித்து தலையணையில் தீப்பிடித்து அவரின் முகம் மற்றும் தோள் பட்டையில் காயமேற்பட்டது. இதையடுத்து சந்திரபாபு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.