நடிகர் தவசிக்கு சிம்பு ரூ.1 லட்சம், சமுத்திரக்கனி ரூ.50,000 நிதியுதவி...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு, நடிகர் சிம்பு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


 


தனது உதவியாளர் மூலம் 1 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கிய நடிகர் சிம்பு, தவசியை செல்போனில் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதேபோல் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியும் நடிகர் தவசிக்கு 50 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார்.