உரம் என்று கூறி விவசாயிகளிடம் சுண்ணாம்புக் கற்களை விற்று ரூ.1.26 கோடி மோசடி

பெரம்பலூர் அருகே உரம் என்று கூறி சுண்ணாம்புக் கற்களை விற்று ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 


சிறுகுடல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.


 


இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம், கார்த்திக், துரைக்கண்ணு பாக்டாம்பாஸ் உரம் என்று கூறி ஆயிரத்து 300 மூட்டைகளை 1 கோடியே 26 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளனர்.


 


அதை வயல்வெளிகளில் விவசாயிகள் தெளித்த நிலையில், மக்காச்சோள பயிர்கள் திடீரென கருகியதாக கூறப்படுகிறது.


 


இது தொடர்பாக ஊர் தலைவர்கள் விசாரித்ததில், உரம் என சுண்ணாம்புக் கல்லை வழங்கிய மோசடியை ஒப்புக்கொண்ட உர விற்பனையாளர்கள் தற்போது பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)