பஹ்ரைன் நாட்டின் பிரதமர் அல் கலிபா காலமானார்

பஹ்ரைன் பிரதமர் அல் கலிபா காலமானார்.


 


அவரது வயது 84. உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா (Khalifa bin Salman Al Khalifa) சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.


 


அங்கு அவர் இன்று காலை உயிரிழந்தார். பஹ்ரைனில் ஒரு வாரத்துக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 


உலகில் மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர்களில் அல் கலிபாவும் ஒருவராவார்.