எல்லையில் உள்ள படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்... ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இந்தியா ஓரம்சக் கோரிக்கை

இந்தியா-சீனா இடையேயான 7வது கட்ட ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையில், சீனாவின் எந்த வித கோரிக்கைகளையும் ஏற்காமல், எல்லையில் உள்ள முழுப்படைகளையும் விலக்கிக்கொள்ள இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள்ளது.


கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 6 மாதங்களாக நிலவும் மோதல் போக்கு தொடர்பாக, இந்திய-சீன ராணுவ உயரதிகாரிகளிடையே 7வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் இந்தியப் பகுதியில் சூசுல் என்ற இடத்தில், பகல் 12 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.


இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் தலைமையிலான குழுவும், வெளியுறவுத்துறை கூடுதல் செயலர் ஸ்ரீவத்சவா-வும் பங்கேற்றனர். சீன தரப்பில் முதல்முறையாக அமைச்சக அதிகாரி ஒருவரும், பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, கிழக்கு லடாக் எல்லையில் உரசல் ஏற்பட்டுள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை விலக்கிக் கொள்ள, சீனாவிற்கு இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


படைகளை பின்வாங்கும் பணியை சீனா ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும் எனவும், எல்லைப் பகுதியில் மே மாதத்தில் நிலவிய நிலை மீண்டும் திரும்பவும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.


இதனிடையே, பங்கோங் ஏரியின் தென் கரையில் உள்ள சிகரங்களில் இருந்து, துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என்ற, சீனாவின் கோரிக்கையை இந்தியா மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் ராணுவ தளவாடங்களுடன், 50 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை சீனா எல்லையில் குவித்துள்ளது.


அதற்கு, பதிலடி அளிக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் ராணுவத்தை குவித்து உஷார் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)