மிலாது நபி இன்று கொண்டாட்டம்... அமைதி-வளம் பெருகட்டும் என தலைவர்கள் வாழ்த்து
மீலாது நபி பண்டிகை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர், வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில், ஒழுக்கம், கருணை, சகோதரத்துவம் உள்ளிட்ட நபிகள் நாயகத்தின் கொள்கைகளால், நமது வாழ்க்கை ஒளிரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகத்தின் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நபிகளின் அர்த்தமுள்ள போதனைகளும், அற்புதமான அறிவுரைகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருவூலங்கள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.