ஆயுத பூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும், முதலமைச்சரிடம் திரையங்க உரிமையாளர்கள் கோரிக்கை..!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள் ஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினர்.


இந்த சந்திப்பின்போது, ஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். திரையரங்கு உரிமங்களை தானியங்கி முறையில் புதுப்பிக்க வேண்டும் , காலை 8 மணி முதல் இரவு 2 மணி வரை எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும், இது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் பதிலளித்ததாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.