சென்னை : வழிபடுவது போல நடித்து சாமியின் வெள்ளி கிரீடத்தை திருடிய ஆசாமி !

சென்னையில் ஜெயின் கோவிலில் வழிப்படுவது போல நடித்து சாமி சிலையின் வெள்ளி கிரீடத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.


சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள புருஷாதானி பார்ஷனாத் ஜெயின் கோயிலில் நேற்று முன் தினம் சாமி சிலையின் தலை பகுதியில் இருந்த வெள்ளி கிரீடம் காணாமல் போனது.


இதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவிலின் செயலாளராக அசோக் குமார் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மாலை 6.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வழிபாட்டுக்கு வந்துள்ளார்.


நீல நிற சட்டை அணிந்த அந்த நபர் கோவிலில் சென்று வழிபாடு செய்வது போல நடித்து சுற்றும் முற்றும் பார்த்து சாமி சிலையின் தலைபகுதியில் இருந்த 600 கிராம் வெள்ளி கிரீடத்தை திருடி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.


முன்னதாக, சாமி சிலையின் காதுகளில் இருந்த வெள்ளி பொருட்களையும் அந்த மர்ம நபர் திருட முயற்சி செய்தார். அதனை எடுக்கமுடியாததால் கிரீடத்தை மட்டும் அந்த நபர் திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த கிரீடத்தின் மதிப்பு ரூ. 30.000 ஆகும். சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீசார் தேடி வருகின்றனர்.


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image