சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மின் வயர் அறுந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது மின்வயர் அறுந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.


ராஜபாளையம் அருகே சுண்டங்குளம் பகுதியைச் சேர்ந்த சரவணன், தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் சென்றுகொண்டிருந்தார்.


அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் வயர் திடீரென அறுந்து சரவணன் மீது விழுந்ததில் அவர் மீது தீப்பற்றி உடல் கருகி பலியானார்.


சாலையில் மின் வயர் அறுந்து விழுந்து இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மின்வாரிய ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.