பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது, லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக எச்சரிக்கை

பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ள சிராக் பாஸ்வான், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக கூறியுள்ளார்.


இந்த நிலையில் சிராக் பாஸ்வானுக்கு பாஜக தரப்பில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் பாஜக கடிதம் அனுப்பும் என கூறப்படுகிறது.