’ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ - ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் தொடரும் குளறுபடி..

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இணையதள வேகம் குறைவு, கைரேகை பதிவில் குளறுபடியால் மக்களும், கடை ஊழியர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


தமிழகத்தில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி, போலி ரேசன் கார்டுகளை ஒழிப்பதற்காக பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கடைகளில் கூட்டம் சேரக்க கூடாது என்பதற்காக எந்த தேதியில் ரேசன் கடைக்கு வர வேண்டும் என டோக்கனும் கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்படுகின்றன.


இருப்பினும், கொரோனா போன்ற தொற்று பரவல் உள்ள காலகட்டத்தில் ரேசன் கடைகளில் கைரேகையை பதிவு செய்யும் போது அதிலிருந்து தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் பழைய நடைமுறைகள் படியே பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என கோரிகை எழுந்துள்ளது.சர்வர் கோளாறு உட்பட பிரச்னைகளால், ஆதார்-கைரேகை பதிவை சரிபார்ப்பதிலும் கால தாமதம் நிலவுகிறது.


அன்றாட பணிக்கு செல்வோர் விடுப்பு எடுத்து ரேஷன் பொருட்கள் வாங்க வரும் நிலையில், சர்வர் பிரச்னையால் பல மணி நேரம் வெயிலில் நின்று பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். சர்வர் பிரச்னை ஒருபுறம் இருக்க, முதியோருக்கு கைவிரல் ரேகை பதிவாகாமல் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.


வழக்கமாக, 200 பேருக்கு, பொருள் விற்கும் நிலை மாறி, ஒரு நாளைக்கு, 50 பேருக்கு கூட பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை காணப்படுகிறது.பயோமெட்ரிக் கருவிகள் தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி, தஞ்சை, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் 16-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதை முன்னிட்டு, அதற்கான பணிகள் தீவீரமடைந்துள்ளன.


இதனிடையே, ரேஷன் கடைகளில் தொழில்நுட்ப குறைபாடுகளை களைய வலியுறுத்தி வரும் 12-ஆம் தேதி மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ரேசன் கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்