வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுக்கப்பட்டு வெட்டிப்படுகொலை..

வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.


ஜார்தா கொல்லை மலை கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் மனைவி பாஞ்சாலை, 10 வயது மகள் தீபாவுடன் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் அன்சர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.


மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், ஒரே வீட்டில் அவர் மட்டும் தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் தங்கியிருந்துள்ளனர்.


காலை நேரத்தில் பொன்னுச்சாமி வெகு நேரமாகியும் வெளியே வராததால் அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, தந்தையும், மகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.


மற்றொரு அறைக்குள் படுத்திருந்த மனைவிக்கு எதுவும் ஆகவில்லை. சம்பவ இடத்தில் வடக்கு மண்டல டிஐஜி, ஏஎஸ்பி உள்ளிட்டோர் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்தனர்.