'ஆயுதங்களுடன் சென்று எங்கள் மீனவர்களை தாக்கினர்! 'கன்னியாகுமரி மீனவர்களை கொடுமைப்படுத்தும் கர்நாடக போலீஸ்

கர்நாடக மாநில சிறைகளில் அடைபட்டு கிடக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களை மீட்க தமிழக அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 


கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த அருள்ராஜ், ஜோசப் , அருள் சீலன் சுபின், ராபின்சன் உள்ளிட்டஇ 10 மீனவர்கள் கடந்த 19- ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதிக்கு ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர், கர்நாடக மாநிலம் மால்பே கடல் பகுதியில் 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கர்நாடக மீனவர்கள் 10 படகுகளில் சென்று தமிழக மீனவர்களை தாக்கி பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பின்னர், சிறை பிடித்த தமிழக மீனவர்களை கடலோர காவல் படையினரிடத்தில் ஒப்படைத்துள்ளனர்.


 


கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆயுதங்களோடு சென்று கர்நாடக மீனவர்களை தாக்கியதாக கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கூட்டமாகச் சேர்ந்து கடலுக்குள் கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் கர்நாடக போலீசார் தமிழக மீனவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது, இந்த மீனவர்கள் உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்