அமைச்சர்களுடன் சென்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட்ட ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்குநிலவிவந்தது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது.


அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசார விவாதம் நடைபெற்றது. இருப்பினும், யார் முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்யப்படவில்லை. ஆனால், அன்றைய தினமே அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். பின்னர், 7-ம் தேதி அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். திருப்பதியில் ஓ.பன்னீர் செல்வம் அதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு முதலமைச்சருடன் அமைச்சர்கள் சென்று நன்றி தெரிவித்தனர்.


திருப்பதியில் ஓ.பன்னீர் செல்வம் இந்தநிலையில், புரட்டாசி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை ஆன இன்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம் fமனி,தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் துறைகள் அமைச்சர் சரோஜா ஆகியோர் விஐபி பிரேக் தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.


சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டன. தொடர்ந்து ஏழுமலையான் கோவில் முன் இருக்கும் பகுதியில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திய துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர், திருப்பதி மலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்திற்கு சென்று தேவஸ்தான ஜீயரிடம் ஆசி பெற்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)