காதல் ஜோடிக்கு விரித்த வலையில் சிக்கிய கள்ளநோட்டுகள்..

கோவை சேரன்மாநகரில் தங்கியிருத்த காதல் ஜோடியை போலீசார் தேடி சென்ற போது, அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து 7 லட்ச ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் கைபற்றினர். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தச் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவை சேரன்மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நண்பர்களுடன் தங்கியுள்ளனர். இந்நிலையில் பெண் வீட்டார் தங்களது மகளை காணவில்லை என புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கோவை சேரன்மாநகரில் இருப்பது தெரியவந்தது.


இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார், பீளமேடு காவல் துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் குறிப்பட்ட வீட்டிற்கு நேரில் சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பீளமேடு போலீசாரும், புதுக்கோட்டை போலீசாரும் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.


 


அப்போது ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் 4 கட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை கைபற்றி போலீசார் அதை எண்ணி பார்க்கும் போது 7.5 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. பணத்தை கைப்பற்றிய போலீசார், சேரன் மாநகர் வீட்டில் தங்கியிருந்த புதுகோட்டை காதல் ஜோடி மற்றும் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.


 


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு