ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரான்ஸ் தூதரகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரான்ஸ் தூதரகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சில் கடந்த 16 ஆம் தேதி நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டியதால் வரலாற்று ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.
இது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என்று பிரான்ஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பிரான்சின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரான்ஸ் நாட்டு பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தியும் தெஹ்ரானில் போராட்டம் நடைபெற்றது.