அரசின் உத்தரவை மீறி பள்ளிக்கூடம் திறந்தாச்சி..! முககவசம் மறந்த மாணவர்கள்

தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் கொரோனா பரவி விடக்கூடாது என்று பள்ளிக்கூடம் திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் மதுரையில் அன்னை தெரசா மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.


ஆன் லைன் வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களுக்கு சரிவர புரியாததால் , கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..


கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்திவருகின்றனர்.


ஆந்திராவில் பள்ளிதிறக்கப்பட்ட நிலையில் 26 மாணவர்களுக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்பதை அரசு இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை.


சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் அளவுக்கு தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பெறாத காரணத்தால், கல்வி கட்டணத்தை இழக்க மனமில்லாமல் மாணவர்களை கலர் ஆடைகளில் பள்ளிக்கு ரகசியமாக வரவழைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.


குறிப்பாக மதுரை பாலரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள அன்னை தெரசா மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாணவ மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பில் ஒன்றாக அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் எடுத்த சம்பவம் இந்திய மாணவர் சங்கத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இந்த பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத கூடிய மாணவர்களை தொலைபேசி மூலமாக அழைத்து பள்ளிக்கு கட்டாயம் நேரில் வரவேண்டும் என்று கட்டாயபடுத்துவதாக கூறப்படுகிறது.


செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தினமும் காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


வகுப்புகளில் அமர்ந்திருந்த மாணவர்கள் போதிய சமூக இடைவெளியின்றியும், முககவசம் அணியாமலும் அமர்ந்திருந்தனர்.


இதனையடுத்து பள்ளிக்கு சென்று இந்திய மாணவர்கள் சங்கத்தினர் இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அனைத்து மாணவர்களையும் அவசர அவசரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். என்னதான் ஆன்லைனில் வகுப்பு எடுத்தாலும் ஒருசில மாணவர்களே கவனிக்கின்றனர்.


அதனால் சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ள மாணவர்கள் வந்து செல்லுங்கள் என்றும் காலை 9 மணி முதல் 12 மணி வரை மட்டும் ஸ்கூலுக்கு வரச் சொல்லியதாகவும், அதோடு மதுரையில் பெரிய பெரிய ஸ்கூல்களில் மாணவர்கள் யூனிபார்ம் போட்டே வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என அன்னை தெரசா பள்ளியின் முதல்வர் விளக்கம் அளித்தார்.


அன்னை தெரசா பள்ளியில் மாணவர்கள் சந்தேகம் கேட்பதற்காக வந்தார்கள் என்றும் மதியம் 12 மணிக்கே வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறிய மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் , மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம் என அனைத்து பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்


கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து பள்ளி நிர்வாகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)