தமிழக எல்லைக்குள் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில், காவல்துறையினரும், அதிகாரிகளும் அக்கறையோடு இல்லை

கேரளா எல்லைக்குள் மருத்துவகழிவு பொருட்கள் செல்ல முடியாதவாறு அந்த மாநில காவல்துறையினரும், அதிகாரிகளும் மக்கள் நலன் கருதி செயல்படும்


நிலையில், தமிழக காவல்துறையினரும் அதிகாரிகளும் அவ்வாறு அக்கறையோடு இல்லை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் உள்ள கரடுகுளம் கண்மாயில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.


மருத்துவக் கழிவுகளை அகற்ற உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.