நீதித்துறையில் ஊழல் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து

நீதித்துறையில் ஊழல் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாது என்றும், ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கு அல்ல என்றும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள் நேர்மையாக பணிபுரிய வேண்டும் என்றும், ஊழல் உள்ளிட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகக் கூடாது என்றும், நீதிபதி தெரிவித்தார்.


ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல என்று தெரிவித்த நீதிபதி, நீதித்துறையில் ஊழல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.


மக்களின் கடைசி புகலிடம் நீதித்துறை என்றும் தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதித்துறையில் ஊழல் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாது என உறுதிபடக் கூறினார்