மூத்த பத்திரிகையாளர் தினமணி கே.எஸ். என்ற கே.சுப்பிரமணியம் காலமானார்
தினமணியில் 30 ஆண்டுகாலம்ம் செய்தியாளராக, தலைமை செய்தியாளராக் பணிபுரிந்தார் கே.எஸ். என்ற கே. சுப்பிரமணியம். பின்னர் மீண்டும் தினமலர் நெல்லை பதிப்பில் பணிபுரிந்தார்.
சென்னையில் நிருபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். உடல்நலக் குறைவால் சென்னையில் கே. சுப்பிரமணியம் திங்கள்கிழமையன்று காலமானார். அவருக்கு மனைவி அருள்மொழி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்
மூத்த பத்திரிகையாளர் சுப்பிரமணியத்தின் மறைவுக்கு எம்யுஜே வெளியிட்ட இரங்கலில், தினமணி முன்னாள் தலைமைச் செய்தியாளரும், மூத்த பத்திரிகையாளரும் நம் சங்கத்தின் மூத்த உறுப்பினருமான கே. சுப்பிரமணியம் காலமானார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் இரங்கல் தெரிவித்துள்ளன.