ஹத்ராஸ் இளம் பெண் கொல்லப்பட்ட வழக்கு... சிபிஐ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த முதல் விசாரணை அறிக்கை திடீரென நீக்கம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த முதல் குற்ற விசாரணை அறிக்கை திடீரென நீக்கப்பட்டுள்ளது. 


19 வயது தலித் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் படுகொலை செய்யப்பட்டதாகவும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ.யின் முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது.


இந்நிலையில் அந்த முதல் தகவல் அறிக்கை இணையத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டு வேறு ஒரு அறிக்கை நேற்று பிற்பகலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியக் குற்றவாளி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.