விபத்துக்களை உருவாக்கும் பேரிகார்டுகள்..! வேகத்தடுப்பு விபரீதம்

தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடுப்பிற்காக வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டுகள் பிரதிபலிப்பான் இன்றி விபரீத விபத்தை உருவாக்கும் தடுப்பு கம்பிகளாக மாறிவருகின்றன. அத்தகைய பேரிகார்டால் நிலை தடுமாறிய கார் ஒன்று, லோடு வேனில் மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


 


தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய நெடுஞ்சாலைகளில் வேக தடுப்பிற்காக சாலையில் வேகத்தடைக்கு பதிலாக இரும்பு குழாய்களாலான பேரி கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பேருந்து நிறுந்தங்கள், மக்கள் சாலையை கடக்கும் பகுதிகளில் இந்த தடுப்பு கம்பிகளை அந்தந்த பகுதி போக்குவரத்து காவல்துறையினர் அமைத்துள்ளனர்.


 


குறிப்பாக பைபாஸ் சாலைகளில் அதிவேகமாக செல்வோர் கூட இந்த பேரிகார்டுகள் வரும் போது வேகத்தை குறைத்துக் கொண்டு கடந்து செல்வது வழக்கம், இது போன்ற தடுப்பு பேரிக்கார்டுகள் மத்தியில் சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ள ஒரு வழி சாலைகளில் சிறப்பான பயனை தரும், அதிவேகத்தால் நிகழும் விபத்துக்களும் குறையும், அதே நேரத்தில் மத்தியில் சாலை தடுப்பு இல்லாத இருவழிச்சாலை பகுதிகளில் அதிக எடை கொண்ட இரும்பு குழாய்களால் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய பேரிகார்டுகள் வாகன ஓட்டிகளுக்கு டேஞ்சர் கார்டுகளாக மாறி வருகின்றது.


 


அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் கிராமப்புறச்சாலை ஒன்றில் வேகத்தடுப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டு ஒன்று விபத்துக்களை குறைப்பதற்கு பதிலாக விபத்து பகுதியாக மாறியுள்ளது.


 


புதுச்சேரி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கூட்டுறவு வங்கி ஊழியரான தேவநாதன் என்பவர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு காரில் வழுதாவூர் சென்றுள்ளார். வில்லியனூர் பத்துக்கண்ணு சாலையில் இருந்து உளவாய்க்கால் நான்குமுனை சந்திப்பு பகுதியில் சென்ற போது பிரதிபலிபான் மங்கிய பெரிய பேரிகார்டு சாலையில் இருப்பதை கண்டு அதன் மீது போதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார், அதற்குள்ளாக எதிரே செங்கல் லோடு ஏற்றி வந்த வேனில் கார் பயங்கரமாக மோதியது.


 


சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் உடனடியாக காரில் சிக்கிக்கொண்டு இருந்த தேவநாதன், அவரது தந்தை ராமலிங்கம் உள்ளிட்ட 3பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.


 


விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டனர். காரை வேகமாக ஓட்டிவந்த தேவநாதனுக்கு சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் அருகில் வந்த பின்னர் தான் தெரிந்துள்ளது. இதன் காரணமாக காரின் வேகத்தை கட்டுப்பாடுத்த இயலாமல் வேன் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


 


சந்திப்புக்கு பக்கத்து சாலையில் வேகத்தை குறைக்க 3 வரியிலான வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் வேகத்தடை குறித்த அறிவிப்பு பலகைகள் இல்லை, அது போல கிராமப்புற சாலைக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த இரு பேரிகார்டுகளிலும் போதுமான பிரதிபலிப்பான்கள் இல்லை என்பதும் அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ முக்கிய காரணமாக வாகன ஓட்டிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


 


இங்கு மட்டுமல்ல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாலையில் வேகத்தடுப்பிற்காக வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அவ்வப்போது வர்ணம் பூசி, பிரதிபலிபான்களை ஒட்டி சரியான இடைவெளியில் வைத்திருந்தால் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க இயலும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தாலும், வாகன ஓட்டிகள் தங்களால் கட்டுப்படுத்த கூடிய மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கினால் எந்த சூழ்நிலையிலும் வாகனங்கள் விபத்தில் சிக்காது என்கின்றனர் காவல்துறையினர்.


 


அதே நேரத்தில் சாலையில் பேரிகார்டு இருப்பதை கண்டால் நின்று... கவனித்து வாகனத்தை இயக்கிச்சென்றால் விபத்தை தவிர்க்கலா


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்