கூகுள் பிளே ஸ்டோருக்கு மாற்றாக மினி ஆப் ஸ்டோரை அறிமுகம் செய்த Paytm

டிஜிட்டல் பேமெண்ட் ஆப்பான Paytm தனது சொந்த மினி ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான Paytm பயன்பாட்டின் மூலமே இதை நேரடியாக அணுக முடியும்.


சமீபத்தில் சூதாட்டத்திற்கு எதிரான கொள்கைகளை மீறியதாகக் கூறி கூகுளின் பிளே ஸ்டோரிலிருந்து Paytm அகற்றப்பட்டது. அதற்கு சில வாரங்களுக்கு கழிந்த பிறகு, இப்போது மினி ஆப் ஸ்டோர் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு உள்ளூர் மாற்றாக ஒரு ஆப்-ஐ உருவாக்க இந்திய டெவலப்பர்களுக்கு அழைப்பு விடுத்த பிறகு, கூகுள் பிளேவுக்கு பதிலாக ஒரு இந்திய மாற்றீட்டைக் கொண்டு வருவதற்கு இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக Paytm தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.


அதிலும் குறிப்பாக, கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆப்-களை விற்றால் அதற்கான 30 சதவீத கமிஷனை அந்நிறுவனம் பெறுவதன் மூலம் அது தனது பிடியை இறுக்கியதாகவும், அதன் பின்புதான் கூகுள் செயலிக்கு ஒரு இந்திய மாற்றீடாக இந்த ஆப் ஸ்டோர் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.


இந்த மினி ஆப் ஸ்டோரில், டெக்கத்லான், ஓலா, ராபிடோ, நெட்மெட்ஸ், 1 எம்ஜி, டோமினோ பிஸ்ஸா, ஃப்ரெஷ்மெனு, நோபிரோக்கர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட ஆப்கள் சேர்ந்துள்ளதாக பேடிஎம் தெரிவித்துள்ளது.


Paytm இவற்றை எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்குகிறது. டெவலப்பர்கள் பயனர்களுக்கு Paytm Wallet, Paytm Payments Bank, UPI, Net Bank, and card payment ஆகியவற்றைத் தேர்வு செய்யும் வசதியையும் வழங்க முடியும். அதேபோல, மினி ஆப் ஸ்டோரை Paytm பயன்பாட்டின் மூலம் பெறலாம் என்றும் சிறந்த அனுபவத்தை அளித்து, தரவுகளையும் பேட்டரியையும் அது சேமிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.


இதேபோல, Paytm போட்டியாளரான PhonePe அதன் இன்-ஆப் இயங்குதளத்தை கடந்த ஜூன் 2018-ல் அறிமுகப்படுத்தியது. பின்னர் இது கடந்த ஆண்டு அக்டோபரில் PhonePe Switch என மறுபெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மினி ஆப் ஸ்டோரை Paytm-ல் பெற home screen > show more > mini app store என்ற வழிமுறையில் அணுகலாம். இந்த மினி ஆப் ஸ்டோரில் ஷாப்பிங், உணவு விநியோகம், சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பயணம் மற்றும் போக்குவரத்து, செய்திகள், நேரடி தொலைக்காட்சி உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.


இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ஐ.ஏ.எம்.ஏ.ஐ) கடந்த மாத இறுதியில் தனது உறுப்பினர்களுடன் ஒரு பிரச்னையைப் புரிந்துகொள்ள ஒரு கூட்டத்தை நடத்தியது.


அந்த கூட்டத்தில் பேசிய லைவ்மின்ட் உறுப்பினர், இந்த நாட்டின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான நுழைவாயிலை கூகுள் வைத்திருப்பதால், அவர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது; எங்கள் நாட்டின் சட்டங்களுக்கு முரணான அவர்களின் விதிமுறைகளை அமல்படுத்தக்கூடாது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்