விழுப்புரத்தில் தவறவிட்ட பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு;

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள நங்காத்தூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(28) இவர் வெளி நாட்டில் வேலை செய்துவிட்டு விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார்,


 


அங்கிருந்து பேருந்து மூலம் விழுப்புரம் வந்த தமிழ்ச்செல்வன் உடல்நிலை சரியில்லாததால் விழுப்புரம் புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள வீரன் கோயிலில் உறங்கியுள்ளார். இதனை கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெரியார் என்பவர் தமிழ்ச்செல்வனை ஆட்டோ மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.


 


அப்போது ஒரு பையை கோயிலிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார் தமிழ்ச்செல்வன். ஆட்டோ சென்ற பிறகு இதனை கண்ட பெரியார் பையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு லட்சம் ரூபாய் பணம், பாஸ்போட், ஒரு தங்க மோதிரம், தொலைப்பேசி ஆகியவை இருந்துள்ளது.


 


இது குறித்து விழுப்புரம் தாலுக்காக காவல்நிலையத்திற்கு சென்று அடுத்தவரின் உடைமையை ஒப்படைத்தார். இந்த செயலை கண்ட காவல்துறையினர் பெரியாரை பாராட்டினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)