விசாக்கள் மீதான தடையில் தளர்வுகள் அறிவிப்பு
சர்வதேச விமானப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், பெரும்பாலான விசாக்கள் மீது விதிக்கப்பட்டிருத்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
கொரோனா பரவல் காலகட்டமான பிப்ரவரியில் இருந்து வெளிநாட்டு விசாக்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இனிமேல் ஓஐசி கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டு இந்தியர்கள், வெளிநாட்டினர் என அனைவரும் இந்தியாவுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து விசாக்களின் காலாவதியும் எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் செல்லுபடியானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் எலக்ட்ரானிக் விசா, சுற்றுலா விசா மற்றும் மருத்துவ விசாக்கள் மீதான தடை நீடிக்கும்