கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னை-MGM மருத்துவமனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னை- MGM மருத்துவமனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


சென்னை- ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தொடர்ந்த வழக் கில், தனது தந்தை குமார், MGM மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 3 ஆம் தேதி, கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.


அரசு விதிப்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக 10 நாட்களுக்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 562 ரூபாய் எம்ஜிஎம் வசூலித்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டி உள்ளார்.


இன்சூரன்ஸ் மூலம் மருத்துவ செலவை பெற, ஒத்துழைக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம் தமக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும் மனுதாரர் குற்றஞ்சாட்டி உள்ளார். கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப தரக் கோரி, கணேஷ் தொடர்ந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது