பிளாஸ்டிக் பைப்பில் துப்பாக்கி!- விருதாச்சலத்தில் வில்லேஜ் விஞ்ஞானிகள் கைது

விருத்தாசலம் அருகே பறவைகளை வேட்டையாட பிளாஸ்டிக் பைப்பில் துப்பாக்கி செய்த


இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் அடிக்கடி வேட்டைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


காட்டுக்குள் வலை வைத்து, பொறி வைத்து பறவைகள் , சிறிய விலங்குகளை அவ்வப்போது பிடித்து வந்தனர். ஒரு கட்டத்தில் துப்பாக்கி வைத்து வேட்டையாடும் ஆசை இருவருக்கும் வந்துள்ளது. ஆனால், துப்பாக்கிக்கு எங்கே போவது?...


உடனே இருவருக்கும் யூடியூப் ஆசான்தான் நினைவுக்கு வந்தார். யுடியூப்பை பார்த்து துப்பாக்கி செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொண்டனர்.


பின்னர், பி.வி.சி பைக் கொண்டே பிளாஸ்டிக்கில் துப்பாக்கிசெய்துள்ளனர். துப்பாக்கியில் பயன்படுத்த தோட்டாவும் தயாரித்துள்ளனர். பிறகு, தாங்கள் தயாரித்த புதிய கண்டுபிடிப்பை சோதித்து பார்க்க புதுப்பேட்டை காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.


அதற்குள், இளைஞர்களை மோப்பம் பிடித்து விட்ட ஆலடி போலீஸார் காட்டுககுள் வைத்தே அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். போலீஸார் விசாரணையில் பறவைகளை வேட்டையாடுவதற்காக பிளாஸ்டிப் பைப் கொண்டு துப்பாக்கி தயாரித்ததை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.


யுடியூப் பார்த்து சட்டத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)