அரசு நிலத்தில் தந்தை கட்டிய வீடு... பட்டா மாற்றம் செய்த பெண் வி.ஏ.ஓ. அதிரடி பணியிடை நீக்கம்!

அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் விவசாயம் செய்து வருகிறார்.


இவரது மகள் ராணி அரியலூர் மாவட்டம், காவனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ராணியின் தந்தை தனவேல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார். ஆக்கிரமிப்பு செய்த இடத்துக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு மகளிடம் தனவேல் கேட்டுள்ளார்.


அப்போது ராணி, கடுகூர் கிராம நிர்வாக அலுவலருக்கான முத்திரையை போலியாகத் தயார் செய்து, கடுகூர் கிராம நிர்வாக அலுவலரான சரஸ்வதியின் கையெழுத்தையும் போலீயாகப் போட்டு, வருவாய்த் துறையினர் மூலம் பட்டா மாற்றம் செய்துள்ளார்.


இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார்.


விசாரணையில் கடுகூர் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்து மற்றும் முத்திரையை போலியாக செய்து ராணி பட்டா மாற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் ராணியைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார். கடுகூர் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதியின் கையெழுத்து மற்றும் முத்திரையை எப்படி ராணி பயன்படுத்தினார்.


அதற்கு சரஸ்வதியும் உடந்தையாக இருந்தாரா என்பது குறித்து வருவாய்த்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்..!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா