தாயின் கூடு ஜிகிரி தோஸ்து.. கொரோனா ஊரடங்கால் பணியிழந்த ஐடி ஊழியர்களின் நடமாடும் உணவகம்.

கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்த ஐடி ஊழியர்கள் ஒன்றிணைந்து ஓட்டுநர்களுக்கு 10 சதவிகித சலுகை அளித்து நடத்திவரும், தாயின் கூடு ஜிகிரி தோஸ்து நடமாடும் உணவகம் பொதுமக்களின் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.


கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கட்டதில் கடந்த 7 மாதத்தில் நாட்டில் ரயில் போக்குவரத்து பேருந்து சேவை பயணிகள் விமான சேவை என முடங்கியது நாடு முழுவதும் நாடு முழுவதும் சிறு குறு தொழில்கள் ஏராளமான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.


இதில் ஐடி நிறுவனங்கள் வீடுகளிலிருந்து பணிகளை செய்ய ஊழியர்களை அறிவுறுத்தியது புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக கூட பயணித்தனர் . சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இளைஞர்கள் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பை இழந்தனர்.


இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் ஐடி நிறுவனத்தில் வைட் கலர் ஜாப் காலரை தூக்கி விட்டுக் கொண்டு கம்பீரமாய் பணிக்குச் சென்ற இளைஞர்கள் வேலையில்லாத பணிச்சுமையால் மனம் சோர்ந்து கடன்வாங்கி அல்லல்பட்டு வந்தனர்.


ஆனால் இதற்கு விதிவிலக்காக திருவள்ளூரை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணி வாய்ப்பை இழந்த இளைஞர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக குழுவாக இணைந்து நடமாடும் உணவகத்தை நடத்தி வருகின்றனர். அதில் ஓட்டுநர்களுக்கு 10 சதவிகிதம் விலை குறைப்பு செய்து பொதுமக்களின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.


தொடர்ந்து தாங்கள் குழுவாக நடத்திவந்த தொண்டு நிறுவனத்தையும் அதனை சார்ந்து இருந்த ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவிட உணவுக் கடை நடத்த தீர்மானித்து அதனை சிறப்பாக நடத்தி‌வருகின்றனர்.


ஐடி வேலை இல்லையே என்ற மன ஏக்கத்தில் சோர்ந்து போய் விடாமல் திருவள்ளூர் அருகே உள்ள பிரியாங்குப்பத்தில் தாயின் கூடு என்ற பெயரில் நடத்திவரும் அமைப்பிற்கு உதவும் விதமாக அதன் பெயரிலேயே தாயின் கூடு ஜிகிரி தோஸ்து என்ற பெயரில் வித்தியாசமான முறையில் நடமாடும் உணவகத்தை பணியை இழந்த இந்த ஐந்து ஐடி ஊழியர்களும் திறம்பட நடத்தி வருகின்றனர்.


இங்கு சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் வந்து உணவருந்தி செல்கின்றனர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் அருகிலேயே தங்களது நகரும் சிற்றுண்டி உணவகத்தை சிறப்பாக நடத்தி வருவதை பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.


வேலை போச்சே ஏற்ற கவலையில் ஆழ்ந்து விடாமல் கூட்டாக இணைந்து ஐடி துறையில் சாதித்தது போன்றே சமையல் கலையிலும் ஓட்டல் தொழிலிலும் அசத்தி முன்மாதிரியாக இருந்து வருகின்றனர் இந்த முன்னாள் ஐடி ஊழியர்களான இந்த தாயின் கூடு ஜிகிரி தோஸ்துகள் இவர்களை நாமும் பாராட்டுவோம்.


வேலையை இழந்து வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் முன்மாதிரியாக படித்த படிப்புக்கு துளியும் சம்பந்தம் இன்றி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று கைகட்டி நிற்கும் ஐடி ஊழியர்களாக இல்லாமல் பொதுமக்கள் உணவருந்தும் ஓட்டுநர்கள் பாராட்டும் உணவக உரிமையாளர்களாக மிடுக்காய் திகழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)