ஒரே நாடு ஒரே ரேசன்... பிறமாநில தொழிலாளர்களுக்கும் மத்திய அரசின் விலையிலேயே பொருட்கள் வழங்க வேண்டும்

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கிவைத்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை நியாயவிலைக்கடைகளுக்கு அணுப்பப்பட்டுள்ளது.


சுற்றறிக்கையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குள் அதே கிராமம் மற்றும் வார்டு தவிர பிற நியாயவிலை கடைகளில் தங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எவ்வித புகார்களுக்கு இடம் அளிக்காமல் திட்டத்தை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் தங்களுக்கான பொருட்களை பெற தங்கள் உறவினர்கள் தெரிந்தவர்களை நியமித்து பொருட்களை பெற ஏதுவாக உரிய படிவத்தில் நபர்களுக்கான விவரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா