கொரோனா பாதிப்பால் ஊழியர்களை குறைக்க அமீரக நிறுவனங்கள் முடிவு

கொரோனா பாதிப்பு காரணமாக 30 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்க அமீரகம் திட்டமிட்டுள்ளது.


இது குறித்து தனியார் நிறுவனம் ஒன்று அமீரகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில், கொரோனா பாதிப்பு காரணமாக 30 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.


30 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை சராசரியாக தலா 10 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளன. மேலும் சில நிறுவனங்கள் வருகிற டிசம்பர் மாதம் வரை 75 சதவிகித சம்பளத்தை மட்டுமே வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளன.


ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதை பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.