பாஜக தலையீடு! ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே முடிந்தது டீல்

வரும் 2021 ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் அதிமுக வில் தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் வாக்குவாதம் நடைபெற்று வந்தது.


இந்நிலையில் அதிமுக மீண்டும் இரு பிளவுகளாகப் பிரிந்து விடும் அதை வைத்து நாம் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று எதிர்க்கட்சியான திமுக நினைத்து ஆனந்தக் கூத்தாடியது. இதற்கிடையே ஓ.பி. எஸ். ஒரு அணியாகவும், ஈ. பி. எஸ். ஒரு அணி யாகவும் தங்களது ஆதர வாளர்களைத் திரட்டிய வண்ணம் இருந்தனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்ப்ட டது.


ஓ.பி. எஸ்மோடி தன்னை நட்பு பாராட்டுவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ண ம் இருந்ததுஅதே போன்று எடப்பாடி பழனிசாமியும் தன்னுடன் இருக்கும் சட்டமன்ற உறுப் பினர்களை நட்பு பாராட்டி தனக்குச் சாதகமாக செயல்படும் வகையில் ஒரு குழுவாகப்இ பிரிந்து ஆலோசனை நடத்தி வந்தார்கள்இந்நிலையில் கடந்த வாரம் நடை பெற்ற அதிமுக செயற்குழு கூட்டம் முடிவு எட்டப்படாமலே நிறைவடைந்தது அப்போது வருகிற 7ந்தேதி (இன்றுமுதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படும் என்று கே.பி. பழனிசாமி தெரிவித்திருந்தார்


கடுமையாக மாறிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனிடையே பாஜக மேலிடத்தின் தலையீடு காரணமாக ஈ பி எஸ் - ஓபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தனையடுத்து ஓபிஎஸ் கூறியதைப் போல் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க ஈபிஎஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. வழிகாட்டு குழுவை முதலில் அறிவித்து அதனைத் தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப் படுகிறது. வழிகாட்டு குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேரும், ஈபிஎஸ்ஆதரவாளர்கள் 6 பேரும் இடம்பெற உள்ள னர்.


ஈ பி எஸ் தரப் பில் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா, தங்கமணி, வேலு மணி ஆகிய 6 பேர் இடம் பெறுவார்கள் என்று தெரி கிறது. ஓபிஎஸ் தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே . சி . டி . பிரபாகர், முன்னாள் எம்.எல்.ஏ சுப்பு ரத்தினம், வைகுண்டம் வகுண்டம் எம். எல். ஏ.சண்முகநாதன், தேனி கணேசன் அல்லது விருது நகர் பாலகங்கா ஆகிய 5 பேர் இடம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே இன்று அதிமுகவில் இருந்து முக்கிய முடிவு வெளியாகும் என்பதால் அனைவரும் மிகுந்த எதிர் பார்ப்புடன் உள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)