காவல்துறை துணை ஆணையர்களை நிர்வாகத்துறை நடுவராக நியமிப்பது செல்லுமா...தனி அமர்வு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

தமிழகத்தில் காவல்துறை துணை ஆணையர்களை நிர்வாக துறை நடுவராக நியமித்து 2013, 14-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் செல்லுமா, செல்லாதா என முடிவெடுக்க தனி அமர்வை அமைத்து விசாரிக்க


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தனி நீதிபதி பரிந்துரைத்தார். தனக்கு எதிரான நிர்வாக துறை நடுவரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னையை சேர்ந்த தேவி தொடர்ந்த வழக்கு, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.


தொடர்ந்து காவல்துறை துணை ஆணையருக்கு நிர்வாகதுறை நடுவர் அந்தஸ்து வழங்குவதை தொடர்ந்து அனுமதித்தால், வரலாறு மீண்டும் திரும்பிவிடும் என்றும், இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.