ஆண் நண்பர்களுடன் வாட்ஸ் அப் சாட்டிங் மனைவி வெட்டிக் கொலை..! தவிக்கும் பெண் குழந்தை..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆண் நண்பர்களுடன் இரவில் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஈடுபட்டதாக கூறி மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தாய் இறந்துவிட...


தந்தை ஜெயிலுக்கு சென்றுவிட... 3 வயது பெண் குழந்தை நிர்கதியான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் , லட்சுமி நாராயண நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.


இவரது மனைவி சிந்துஜா இவர்களுக்கு யோசிகா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மணிகண்டன், பணிக்கு சென்றுவிட்டால் சிந்துஜா, தனது ஆண் நண்பர்கள் சிலருடன் வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்வதை வழக்கமாக்கியதாக கூறப்படுகின்றது.


மனைவியின் செல்போனை வாங்கிப்பார்த்த மணிகண்டனுக்கும் அவரது மனைவி சிந்துஜாவிற்கும் வாட்ஸ் அப் சாட்டிங் தொடர்பாக சில மாதங்களாகவே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் கணவனின் எச்சரிக்கையை மீறி மனைவி சிந்துஜா, நண்பர்களுடன் வாட்ஸ் அப் சாட்டிங்கில் மீண்டும் ஈடுபட்டதை கண்டறிந்த மணிகண்டன் சத்தம் போட்டதால் செவ்வாய்கிழமை காலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.


ஆத்திரமடைந்த மணிகண்டன் மனைவி சிந்துஜா கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.படுகாயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் படுக்கையிலே பரிதாபமாக உயிரிழந்தார்.


மனைவி உயிரிழந்ததை அடுத்து மணிகண்டன் உடனடியாக அட்கோ காவல்நிலையத்திற்கு சென்று தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


இதனையடுத்து அட்கோ போலீஸார் மற்றும் ஒசூர் டிஎஸ்பி முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சிந்துஜாவின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த கொலைக்கான உண்மையான காரணம் இது தானா ? அல்லது இதன் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளனவா ? என்பது குறித்தும், சிந்துஜா செல்போனில் யார் ? யாருடன் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஈடுபட்டார் ? என்பது குறித்தும் அட்கோ போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


கணவன் மனைவிக்குள் பேசி சரி செய்ய இயலாத அளவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டால் பரஸ்பரம் விவாகரத்து பெற்றுக் கொண்டு அமைதியாக பிரிந்து சென்றுவிடலாம்.


அதை விடுத்து கொலை செய்வதால் உயிரிழப்பு ஏற்படுவதோடு, ஒட்டு மொத்த குடும்பமும் சிதைந்துவிடும் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர்.


தந்தையின் அவசர புத்தியால் தாய் கொலை செய்யப்பட்டு விட, தந்தையும் தற்போது ஜெயிலுக்கு சென்று விட்டதால் அவர்களது 3 வயது பெண் குழந்தை மட்டும் நிர்கதியாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்