போலீசை வெட்டிய ‘பிளேடு’ பக்கிரி…! போதையில் அட்டகாசம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கஞ்சா போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த ஒருவன், தட்டிக்கேட்ட காவலரை பிளேடால் தாக்கிவிட்டு ஓடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


போதையை ஒழிக்க மறந்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் நிலையம் அருகில் உள்ள தாழையாத்தம் பகுதியில் கஞ்சா மற்றும் மது போதையில் இளைஞர் ஒருவர் போதையில் சுற்றித்திரிந்துள்ளார்.


அந்த வழியாக சாலையில் செல்வோரிடமும், கடைக்காரர்களிடமும் குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி தகராறு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.


இது குறித்து தகவல் அறிந்து குடியாத்தம் காவல் நிலையத்தில் இருந்து அருண் கண்மணி என்ற காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். போதையில் ரகளை செய்து கொண்டிருந்த இளைஞரை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.


அங்கிருந்து தப்பி ஓடியவனை இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்று மடக்கி உள்ளார் காவலர் அருண் கண்மனி. அப்போது போதை ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் அருண் கண்மணியின் காது மற்றும் தாடை கழுத்து பகுதிகளில் சரமாரியாக அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். உடலில் ரத்தம் வலிந்த நிலையிலும் தப்பி ஓடிய பிளேடு பக்கிரியை பிடிக்க காவலர் அருண் கண்மணி முயன்றார் ஆனால் முடியவில்லை.


இதையடுத்து பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த பதை பதைக்கும் காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த கடையில் உள்ள சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது.


அந்த பதிவுகளை வைத்து பிளேடு பக்கிரியை காவல்துறையினர் தேடினர். இதில் அவன் அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பது தெரியவந்தது. அவனை பிடித்து போலீசார் சிறப்பான கவனித்து விசாரித்து வருகின்றனர்.


வேலூரில் பல பகுதிகளிலும் மது போதை ஆசாமிகள் கூடுதல் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதாகவும், போதை உச்சிக்கு ஏறிய நிலையில் பொதுமக்களை தாக்குவது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக, சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் தான் பிடிக்க முயன்ற போலீஸ் காரரை வெறித்தனமாக பிளேடால் தாக்கி உள்ளான், அந்த பிளேடு பக்கிரி நவீன்குமார் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.


காவல்துறையினர் இது போன்ற ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதை வஸ்துக்களின் விற்பனையையும் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)