மம்மி மாடு மேய்க்க போறேன்..! பள்ளிக்கூடம் வேணாம்..! சின்ன வாண்டின் ரீங்காரம்

கொரோனா கால தொடர் விடுமுறையால் வீட்டில் சுதந்திரமாக இருக்கும் சின்னஞ்சிறுமி ஒருவர் தான் படிக்க விரும்பவில்லை என்றும் மாடுமேய்க்க விரும்புவதாகவும் தாயிடம் உரையாடும் சுவாரஸ்யமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.


கொரோனாவால் தமிழகத்தில் பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.


பெரும்பாலான தொடக்க பள்ளி மாணவர்களும் , எல்.கேஜி. , யூ.கேஜி மாணவர்களும் பள்ளியை மறந்து விளையாட்டுக்கும் , கார்ட்டூன் தொலைக்காட்சிக்கும் அடிமையாகி தெருக்களில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.


இதற்கெல்லாம் ஒருபடிமேலே போய் பள்ளிக்கூடத்திற்கு பதிலாக மாடு மேய்க்க செல்வதாகவும், படிப்பையே வெறுப்பாக பார்க்கும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், தாயிடம் உரையாடும் சின்னஞ்சிறு வாண்டின் எண்ண ஓட்டம் பிரதிபலிக்கின்றது.


அதுவும் தனது சகோதரி ஆன்லைன் வகுப்பில் படிப்பதை பார்த்து, படிப்பு கஷ்டமாக இருக்கும் என்ற மன நிலைக்கு வந்ததாக தனது தாயிடம் தெரிவிக்கிறாள் குறுப்புக்காரச்சிறுமி. இணையத்தில் வைரலாகி பலரை கவர்ந்துள்ள


இந்த வீடியோவில் உள்ள சின்ன வாண்டுக்கு படிப்பதை விட மாடுமேய்ப்பது கடினமான காரியம் என்பதை எப்படி பெற்றோர் புரியவைக்க போகிறார்களோ ? என்று கேள்வி எழுந்தாலும் கொரோனா விலகி நிலைமை சீரடைந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புவோம்.


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image