மெக்கா மசூதியில் 6,000 யாத்ரீகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மெக்காவில் குறைந்த அளவிலான யாத்ரீகர்களே தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.


உலக நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில், இந்தாண்டு மெக்கா நகரிலுள்ள மசூதியில் ’உம்ரா’ எனும் சமயக் கடமையை நிறைவேற்ற உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இந்நிலையில், முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு நாளைக்கு 6,000 யாத்ரீகர்கள் மட்டுமே மெக்கா மசூதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மசூதிக்குள் அதிகபட்சமாக 3 மணிநேரம் வரை இருக்கலாம் அறிவுறுத்தப்பட்டிருப்பதோடு, மசூதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணியை சவுதி அரசு மேற்கொண்டுள்ளது.