பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு... உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு, 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 


 


தமிழகத்திலிருந்து மத்திய அரசின் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை, நடப்பாண்டே உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


 


இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில், இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை குழுவின் பரிந்துரை கிடைக்காத நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 27 சதவிகித இட ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் இடஒதுக்கீட்டை கண்டிப்பாக வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருந்தது.


 


இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஓ.பி.சி. மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. அண்மையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)