போதையின் பிடியில் தென் தமிழகம்... மதுரையில் 5 டன் குட்கா பறிமுதல்!

மதுரையில் தடை செய்யப்பட்ட ஐந்து டன் குட்கா போதைப் பொருளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


மதுரையில் சமீப காலமாகவே தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள் அதிகளவில் விற்பதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, போலீசாருக்கு சில ரகசியத் தகவலகள் கிடைத்தன. இதையடுத்து, திலகர் திடல் காவல் துறையினர் ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த லாரிகளில் சோதனையிட்டனர்.


லாரிகளில் பண்டல் பண்டலாக சுமார் 5 டன் அளவிளான குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


கைது செய்யப்பட்ட லாரி டிரைவரிடத்தில் விசாரித்தபோது, “இந்த குட்காவை இர்பான் மற்றும் செல்வி பார்சல் சர்வீஸ் நிறுவனங்களில் டெலிவெரி செய்வேன். அவர்கள் தென் தமிழக மாவட்டம் முழுவதற்கும் டெலிவரி செய்வார்கள்” எனும் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளனர்.


தொடர்ந்து, இர்பான் லாரி சர்வீஸ் மற்றும் செல்வி லாரி சர்வீஸ் நிறுவனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும், குட்கா கடத்தலில் தொடர்புடையதாக மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், மேலஅனுப்பானடியை சேர்ந்த துரைப்பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட போது, கார்த்திக் தீபக் என்பவன் குட்கா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.


இதற்கு முன்பு மதுரையில் குறைந்த அளவு குட்காதான் பறிமுதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, முதன்முறையாக 5 டன் அளவுக்கு குட்கா பிடிபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேடப்பட்டு வரும் கார்த்திக் தீபக் ஏற்கெனவே ஒரு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)