அஸ்ஸாமில் கள்ள நோட்டு அச்சடித்த 4 பேர் கைது; அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல்

அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர் கவுஹாத்தியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசாரைக் கைது செய்துள்ளனர்.


 


அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன. கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரம், ஏடிஎம் அட்டைகள், 14 மொபைல் போன்கள், லேப் டாப் உள்ளிட்ட பலவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து இக்கும்பலுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.