ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வருகிற 25-ந்தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.


சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்றும், 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு மையங்கள்


அல்லது www.tnstc.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், தீபாவளி சிறப்பு பஸ்கள் குறித்து நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.