சென்னை திநகரில் வயதான தம்பதியினரை கட்டி போட்டு 250 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை திநகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் நூரில்ஹக் (71). இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவருக்கு திருமணமாகி ஆயிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் நூரில்ஹக் தம்பதி மற்றும் மனைவியின் அக்கா மகன் முஸ்தபா, பேரன் மொய்தீன் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.


குறிப்பாக தற்போது அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை நூரில் வீட்டிற்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கையில் அரிவாளை காட்டி ஓட்டுனர் அப்பாஸை மிரட்டி கட்டிபோட்டுவிட்டு, பின்னர் வீட்டிற்குள் நுழைந்து நூரில், அவரது மனைவி, மற்றும் உறவினர் மொய்தீன் ஆகியோரை கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த சுமார் 250 சவரன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் பணம், 60 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.


பின்னர் வீட்டில் இருந்த ஹோண்டாசிட்டி காரை திருடிக் கொண்டு உறவினர் முஸ்தபாவை அந்த கும்பல் கடத்தி சென்று தி.நகரில் உள்ள தனியார் துணிக்கடை வாசலில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர்.


இதுகுறித்து நூரில் ஹக் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் நகை, பணம், கொள்ளையடித்த கும்பல் முஸ்தபாவை மட்டும் கடத்தி சென்று விடுவித்துள்ளதால் பாண்டிபஜார் போலீசார் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


குறிப்பாக முஸ்தபாவிற்கு கொரோனா தொற்று என்பதால் போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது எந்தவிதமான சோதனைகளையும் மேற்கொள்ளாமல் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரித்து வருவதால் பிற காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)