ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனம் நடத்தி சுமார் ₹ 20 கோடி வரை மோசடி என புகார் - ஒருவர் கைது

கோவை அத்திபாளையம் சித்தாபுதூர் பகுதியில் டெய்லி-மேக்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனம் நடத்தி வந்தவர் செந்தில்குமார்.


காரமடை பகுதியைச் சேரந்த இவர் நடத்திய ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.


குறிப்பாக 1 லட்சம் செலுத்தினால் 100 நாட்களில் 2 லட்சமாக திருப்பித் தரப்படும் எனவும், 1 லட்ச ரூபாய் செலுத்தினால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்குவதுடன், வருடத்தின் முடிவில் 2 லட்சமாக பணம் திருப்பிக் கொடுக்கப்படும் எனவும் கூறி வாடிக்கையாளர்களிடம் முதலீடு பெற்றுள்ளார்.


கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய நிலையில் பணம் திரும்ப கிடைக்காததால் பொருளாதார குற்றபிரிவு காவல் துறையில் புகாரளித்தார்.


சரவணன் புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.