சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்... 2 பேர் சஸ்பெண்ட்

சேலத்தில் கொரோனா பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சாலையில் சிதறி கிடந்த விவகாரத்தில் கொசு ஒழிப்பு கள பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


ஆத்தூர் அருகே கொத்தாம்பட்டி சாலையில் நேற்று மாலை சாலையோரத்தில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் அடங்கிய 8 குப்பிகள் சிதறி கிடந்தன.


இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலைய கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் சரவணன் மற்றும் செந்தில் ஆகியோர் பரிசோதனை மாதிரிகளை இரண்டு சக்கர வாகனத்தில்


சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது தவற விட்டது தெரியவந்தது.இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.