நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 2ஆவது விவிஐபி விமானம் இந்தியா வந்தடைந்தது
குடியரசுத் தலைவர், பிரதமர் பயணிப்பதற்காக நவீன வசதிகளுடன் அமெரிக்காவில் மேம்படுத்தப்பட்ட 2ஆவது விவிஐபி விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது.
2018ம் ஆண்டில் போயிங் -777 மாடல் விமானங்கள் வாங்கப்ப்பட்டன. பின்னர் அந்த விமானங்கள், அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் இருக்கும் போயிங் ஆலைக்கு நவீன வசதிகளுடன் மேம்படுத்த அனுப்பப்பட்டன.
அதில் முதலாவது விமானம், இம்மாத தொடக்கத்தில் இந்தியா வந்தடைந்தது. இந்நிலையில் 2ஆவது விமானம், டெல்லிக்கு நேற்று வந்தடைந்தது. 2 விமானங்களிலும் அமெரிக்க அதிபர் பயணிக்கும் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில்இருப்பது போன்ற ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு அமைப்பு, பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதி, பிரமாண்ட அலுவலக அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இந்த விமானங்கள் இரண்டும் ஏர் இந்தியா ஒன் விமானங்களாக கருதப்படுகின்றன.