"முதலில் நான் டாக்டர்" விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்த எம்.எல்.ஏ.
அய்யலூர் அருகே விபத்தில் காயமடைந்தருக்கு,வேடசந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டாக்டர் பரமசிவம் இவர் தனது கட்சி நிகழ்ச்சிக்காக வேடசந்தூரில் இருந்து அவரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது தண்ணீர் பந்தம் பட்டி என்ற இடத்தில் புத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த முதியவர் மீது ஆட்டோ மோதி உள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார் அப்போது அவ்வழியாக சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி காயத்துடன் பிறந்த முதியவரை தூக்கி அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் செய்த பின் அவரை ஆட்டோவில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.