அடுத்தடுத்து சந்திப்புகள்.! அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வுகள்.!

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் இல்லங்களில் ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன.


தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும், முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை, அக்கட்சியின் இரட்டைத் தலைமை நாளை, புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. .


சட்டமன்ற தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஏற்படுத்தப்பட்டு, அதுகுறித்தான அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


இந்தச் சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர், மற்றும் துணை முதல்வர் இல்லங்களில், அடுத்தடுத்து, ஆலோசனை சந்திப்புகள் நடைபெற்றன.


முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் இருவரையும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், காமராஜ் உள்ளிட்டோர்


எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். அதேசமயம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி, வைத்தியலிங்கம், உள்ளிட்டோர் ஓபிஎஸ்சை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


இவர்களைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒருமித்த கருத்து எட்டப்பட்டு தேவையான முடிவு சீக்கிரம் வரும் என்றார்.


இதனைத் தொடர்ந்து, மாலையில், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர்.சி.விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், ஆகியோர், முதலமைச்சரை சந்தித்துப் பேசினர். அதேசமயம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், உள்ளிட்டோர், துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்துப் பேசினர்..


சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சரையும், துணை முதல்வரையும் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், ஒரு தரப்பில் 6 பேரும், மற்றொரு தரப்பில் 5 பேரும் இடம்பெறுவார்கள் என்றும், தகவல் வெளியாகியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!