ஹரியானா மாநிலத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 17 இளம் குற்றவாளிகள் தப்பி ஓட்டம்

ஹரியானா மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 17 இளம் குற்றவாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


ஹிசார் பகுதியில் இருந்த அந்த சீர்திருத்தப் பள்ளியில் இருந்த இவர்கள் பாதுகாப்புப் படையினரைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இவர்களில் 8 பேர் கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நேற்று மாலை நடந்த இந்த நிகழ்வில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். தப்பியவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளதாக ஹிசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வான் சிங் தெரிவித்துள்ளார்.